அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
x

துத்திப்பட்டு அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த துத்திபட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி பதிவேடுகளை பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது குறித்து சமையலர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் டெங்கு நோய் பரவாமல் இருக்க கொசு மருந்து அடிக்கும் பணியையும் பார்வையிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ், துணைத் தலைவர் விஜய், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் கார்த்திக்ஜவகர், நகர மன்ற உறுப்பினர் வசந்த்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story