சமையல்கூடம் இல்லாத அங்கன்வாடி மையம்
என்.சந்திராபுரம் சாலைப்புதூரில் சமையல்கூடம் இல்லாததால் திறந்து வெளியில் சமையல் செய்யும் அவல நிலை உள்ளது.
நெகமம்
என்.சந்திராபுரம் சாலைப்புதூரில் சமையல்கூடம் இல்லாததால் திறந்து வெளியில் சமையல் செய்யும் அவல நிலை உள்ளது.
அங்கன்வாடி மையம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியில் உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
ஆனால் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைக ளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல் கூடம் இல்லை.
இதனால் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில் குழந்தைகளுக்காக உணவு சமைக்கின் றனர்.
இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் சமையல் செய்ய முடியாமல் சமையலர் தவித்து வருகிறார். திறந்த வெளியில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திறந்தவெளியில் சமையல்
மேலும் மழை காலத்தில் அந்த ஓட்டு கட்டிடம் ஒழுகுவதால் குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. அது போன்ற நேரங்களில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் வெளியே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.
இது குறித்து என். சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி ரமேஷ் கூறியதாவது:
சாலைப்புதூரில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் திறந்தவெளியில் சமையல் செய்து உணவு கொண்டு செல்லப்படுகிறது.
எனவே அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
புதிய கட்டிடம் கட்டித் தரா விட்டால் பொதுமக்களை திரட்டி பொள் ளாச்சி-திருப்பூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபடுவோம் என்றார்.