அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திருவாரூர்

திருவாரூர்:

பங்கு தொகையை உடனடியாக வழங்கக்கோரி திருவாரூர் சத்துணவு பணியாளர் கூட்டுறவு சங்கத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவை கூட்டம்

திருவாரூர் திருமஞ்சன வீதியில் மாவட்ட சத்துணவு பணியாளர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் காரைக்காட்டு தெருவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கென தனி கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.

இந்தநிைலயில் சத்துணவு பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் அங்கன்வாடி பணியாளர்களை உறுப்பினராக தொடர்ந்து நீடித்து கடன் உதவி வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நேற்று மதியம் பேரவை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதனை அறிந்த அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவு பணியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு திரண்டனர். அப்போது தங்களுக்கென தனி சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் சத்துணவு சங்கத்தில் உறுப்பினராக தொடர்ந்து நீடித்து கடன் வழங்குவதால், அங்கன்வாடி சங்கத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன் வழங்கும் போது பிடிக்கப்படும் பங்கு தொகை திரும்பி தராமல் உள்ளதையும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சத்துணவு பணியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரேமா, மாவட்ட செயலாளர் தவமணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சத்துணவு பணியாளர் சங்கத்தில் அங்கன்வாடி பணியாளர் உறுப்பினராக நீடிப்பது குறித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள பங்கு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இகுதுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

--



Next Story