அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கூடாது என வலியுறுத்தி அருப்புக்கோட்டை வட்டார அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் யூனியன் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கூடாது. , அப்படி பொருத்தினால் பணிக்கு வர மாட்டோம் என முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்தமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story