அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமதிலகம் தலைமை தாங்கினார். செயலாளர் மலர்விழி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் லட்சுமிதேவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சந்திரா, சாந்தி, சீதா, மீனா, தீபா, கோவிந்தம்மாள், சரளா, சுதா, தமிழ்ச்செல்வி, மஞ்சுளா, வைதேகி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் புனிதா நன்றி கூறினார்.