அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களை எந்த வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்து பழுதடைந்துள்ள புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.ஏற்கனவே மினி மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். 1993-ம் ஆண்டில் பணிகள் சேர்ந்தவர்களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும். திட்டப்பணி தவிர பிற துறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும். உணவின் செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story