அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பையில் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே செலுத்தவேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் விளக்கவுரையாற்றினார். செயலாளர் இளஞ்செல்வி, துணைச்செயலர் பட்டத்தி, பொருளாளர் அம்பிகா, சி.ஐ.டி.யு. இசக்கிராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஓமனா, லெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் அம்பை வட்டாரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மூக்கம்மாள் நன்றி கூறினார்.


Next Story