அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 6 மாதங்களுக்கு மேல் செலவு செய்த காய்கறி செலவின தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிலிண்டருக்கு முழு தொகையை வழங்க வேண்டும், மின் கட்டண தொகையை அரசே செலுத்த வேண்டும், மே மாதம் முழுவதும் முழு கோடை விடுமுறையாக அறிவித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சார்பாக சாத்தான்குளம் வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஷீபா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஏஞ்சல், ஒன்றிய நிர்வாகி சித்ரா, எழில், ஜோரத் பாத்திமா, வேதா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் செல்வக்கனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story