அருப்புக்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார அலுவலக வளாகத்தில் குழந்தைகளின் நலன் கருதி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டெய்சி, மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், வட்டார தலைவர் கலைச்செல்வி, செயலாளர் மலர்க்கொடி, பொருளாளர் சித்ரா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.