கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மல்லிகாபேகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார். சமையல் கியாஸ் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லை என்றால் ஆண்டிற்கு 4 சிலிண்டர்களை அரசு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 3 வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story