செலவுக்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தொழிலாளி கல்லால் அடித்து கொலை


செலவுக்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம்:  தொழிலாளி கல்லால் அடித்து கொலை
x

உத்தமபாளையம் அருகே செலவுக்கு பணம் கொடுக்காததால் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தேனி

பணம் கேட்டு தகராறு

உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 60). கட்டிட தொழிலாளி. இவரது தங்கை செல்வியின் மகன் ஜெயக்குமார் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மரியதாஸ், ெஜயக்குமார் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மரியதாசிடம், ஜெயக்குமார் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது மரியதாஸ் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியது.

கல்லால் அடித்து கொலை

அப்போது ஆத்திரமடைந்த ெஜயக்குமார் அருகில் கிடந்த பேவர் பிளாக் கல்லால் மரியதாசை தாக்கினார். பின்னர் அவரை கீேழ தள்ளிவிட்டு ஜெயக்குமார் தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் கல்லால் அடித்ததில் பலத்த காயமடைந்த மரியதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் மரியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். ெதாழிலாளியை கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story