வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்


வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
x

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடராஜருக்கு சன்னதி உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. ஆனி உத்திரம் திருமஞ்சனத்தையொட்டி நேற்று மாலை ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய சுவாமிகளுக்கு செல்லப்பா தலைமையில் சிவாச்சாரியார்கள் பக்தர்கள் கொடுத்த விபூதி, சந்தனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சன்னதி முன்பு கூடியிருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story