பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆனிமாத திருவிழா


பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆனிமாத திருவிழா
x
தினத்தந்தி 2 July 2023 11:53 PM IST (Updated: 3 July 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆனிமாத திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி,

நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் நேற்று ஆனி மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

இதைதொடர்ந்து இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தலைகீழாக தொங்கியவாறு அம்மனுக்கு எலுமிச்சை மாலைகளை அணிவித்து நேர்த்திகடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story