பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமை விரட்டியடிப்பு
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி வனப்பகுதியில் இருந்து வழிதவறி ஆண் காட்டெருமை ஒன்று நேற்று காலை இருளப்பட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் காட்டெருமை அங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் மாந்தோப்புக்குள் சென்றது.
இதனைடுத்து பொதுமக்கள் அரூர் வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் தலைமையில் வனத்துறை சரக பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கிராமத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story