கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளரி ஓடை ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரி ஓடை கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து கால்நடை உதவி டாக்டர்கள் நிஜாமுதீன், டாப்னி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணகி உள்ளிட்ட உதவியாளர்கள் கலந்துகொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். முகாமில் குடற்புழு நீக்கம், கால்நடை பொது மருத்துவம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டன. முகாமில் 104 மாடுகளும், 473 வெள்ளாடுகளும், 175 கோழிகளும், 8 வீட்டு வளர்ப்பு நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. இதில் சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன் ஆகியோர் இணைந்து கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


Related Tags :
Next Story