கால்நடை சுகாதாரம் - விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதாரம் - விழிப்புணர்வு முகாம்
x

நத்தக்காடையூர் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்

முத்தூர்

நத்தக்காடையூர் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

கால்நடை சுகாதாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நத்தக்காடையூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். முகாமினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில் நத்தக்காடையூர் அரசு கால்நடை மருத்துவர் (பொறுப்பு) சிலம்பரசன், முத்தூர் அரசு கால்நடை மருத்துவர் பிரகாசம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சுற்றுவட்டார விவசாயிகளின் காங்கயம், சிந்து இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் மற்றும் எருமைகள் ஆகியவற்றிற்கு

பொதுமருத்துவ பரிசோதனை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினை தரிக்காத கால்நடைகளுக்கு இலவசமாக சிறப்பு சிகிச்சை அளித்து கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முடிவில் சிறந்த கன்று வளர்த்த விவசாயிகளுக்கு மேலாண்மை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவன பயிர்கள், கால்நடை பாதுகாப்பு

=======


Next Story