கால்நடை விழிப்புணர்வு சிறப்பு முகாம்


கால்நடை விழிப்புணர்வு சிறப்பு முகாம்
x

கால்நடை விழிப்புணர்வு சிறப்பு முகாம்

திருப்பூர்

ஊத்துக்குளி

குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிறை ஊராட்சிக்குட்பட்ட சின்னசெங்கப்பள்ளி கிராமத்தில் திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது.

மேலும் சிறப்பு கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் சிறந்த கால்நடை மேலாண்மைக்கு விருதும் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர் தென்கார்த்திகை, மருத்துவர் சக்திவேல், பிரவீன்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர் மதுமிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கருமஞ்சிறை ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் முன்னாள் தலைவர் விக்னேஸ்வரன், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story