ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்


ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில்  விழிப்புணர்வு ஊர்வலம்
x

வாலாஜாவில் ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ராணிப்பேட்டை

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, பரிமளா பாண்டுரங்கன் கல்வி குழுமத்தின் உறுப்பு கல்லூரியான ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில் வாலாஜாவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஊர்வலம் தொடங்கியது. நகர சபை தலைவர் ஹரிணி தில்லை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி நிர்வாகி டி.ஜி.பாண்டுரங்கன், துணை நிர்வாகி பரிமளா பாண்டுரங்கன், தலைவர் கார்த்திக் கிருஷ்ணன், செயலாளர் சந்தியா கார்த்திக் கிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின்போது, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. முடிவில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை அதிகாரி உஷா நந்தினி, நர்சிங் அதிகாரி ஷீலா ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story