அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி:14-ந்தேதி நடக்கிறது


அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி:14-ந்தேதி நடக்கிறது
x

திருப்பத்தூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி 14-ந்தேதி நடக்கிறது

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி 14-ந்தேதி நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடக்கிறது.

முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களுக்குள் வருபவர்களுக்கு ரூ.250-ம் பரிசாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story