அண்ணா சைக்கிள் போட்டி


அண்ணா சைக்கிள் போட்டி
x

பாளையங்கோட்டையில் அண்ணா சைக்கிள் போட்டி நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து போட்டி தொடங்கியது.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். 13 வயது மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது மற்றும் 17 வயது மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடத்தப்பட்டது.

இதில் 486 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஐகிரவுண்டு ரோடு, திருச்செந்தூர் ரோடு, ஆச்சிமடம், புவி ஈர்ப்பு மையம் வரை சென்று அதே பாதையில் மீண்டும் திரும்பி வந்தனர்.

13 வயது பிரிவில் முதலிடத்தில் ராகுல் மற்றும் ஹரிணி, 15 வயது பிரிவில் முதலிடத்தில் சந்தோஷ் மற்றும் மெல்வினா ஜூடித், 17 வயது பிரிவில் ராஜன் சுமித் மற்றும் வெண்ணிலா ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சக்கரவர்த்தி, விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்தினராஜ் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story