அண்ணா சைக்கிள் போட்டிகள் நாளை நடக்கிறது


அண்ணா சைக்கிள் போட்டிகள் நாளை நடக்கிறது
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அண்ணா சைக்கிள் போட்டிகள் பெரம்பலூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்

அண்ணா சைக்கிள் போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த சைக்கிளுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வந்து கலந்துகொள்ள வேண்டும். வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பரிசுகள்

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 15-ந்தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தலா ரூ.250 வீதம் பரிசு தொகைக்கான காசோலையாக வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.


Next Story