அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி


அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
x

அரியலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ. கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றவர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story