குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அன்ன பிரசன்ன திவாஸ் நிகழ்ச்சி
குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அன்ன பிரசன்ன திவாஸ் நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
கலவை, மே.28-
குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அன்ன பிரசன்ன திவாஸ் நிகழ்ச்சி நடந்தது.
கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் திமிரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சார்பில் திட்டத்தின் சார்பில் போஷான்அபியான் திட்டத்தின் ஒரு அங்கமாக அன்ன பிரசன்ன திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். திமிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பாரதி வரவேற்றார்
குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும், தாய்மார்கள் சத்தான உணவு, கீரை வகைகள், சிறுதானிய வகைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story