அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்


அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
x

கடக்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே கடக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்(2)-ன் கீழ் 2021-22-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையுடன் பிற துறைகளும் இணைந்து பொதுமக்களுக்கான முகாமை நடத்தின. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் உதயகுமார் வரவேற்றார். இதில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசினர். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில், பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணா, கொடைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் நெடுமாறன், ஆத்மா திட்டக்குழு தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story