பெல் கூட்டுறவு வங்கியை அண்ணா தொழிற்சங்கத்தினர் முற்றுகை


பெல் கூட்டுறவு வங்கியை அண்ணா தொழிற்சங்கத்தினர் முற்றுகை
x

பெல் கூட்டுறவு வங்கியை அண்ணா தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி நிர்வாகம் அனைத்து கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியதை கண்டித்தும், வங்கியின் செயல்பாடுகளில் உள்ள பல்வேறு நிர்வாக சிக்கல்களை கண்டித்தும், கடன் வழங்குவதில் பாகுபாடு காட்டுவதை கண்டித்தும் பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story