அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:01:19+05:30)

14-வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர்

ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பணப்பயன்களை வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் விஜயகுமார் வரவேற்றார். இதில், கட்சியின் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல், போக்குவரத்து கழக கிளை தலைவர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி அரசு பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சிவா. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.இதில், கட்சியின் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ் செல்வம், தமிழ்கண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்காமல் காலம் கடத்திவரும் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நன்னிலம்

இதேபோல, அண்ணா தொழிற்சங்கம் சார்பாக நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். இதில், நன்னிலம் ஒன்றிய செயலாளர் ராம குணசேகரன், பேரூர் செயலாளர்கள் பக்கிரிசாமி, சுந்தரமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் தலைமையிலும், தொழிற்சங்க மண்டல செயலாளர் ரவி முன்னிலையிலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் டி.ஜி.சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர்கள் சிங்காரவேலு, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story