பூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை


பூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:55+05:30)

கோவில்பட்டி பூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அன்னதான பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், காலை 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story