புத்துக்கோவிலில் அன்னதான திட்டம்
புத்துக்கோவிலில் அன்னதான திட்டத்தை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோவில் பகுதியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் புத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story