"அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை அழைத்து நேரத்தை வீணடித்துள்ளார்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
சென்னை,
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணாமலை வெளியிட்ட கடிகாரத்தின் சீரியல் எண் மாறியுள்ளது. மனசாட்சி உள்ள யாரும் அண்ணாமலை வெளியிட்டதை பில் என்று எடுத்துக்கொள்ளமாட்டார்கள். வாட்ச் வாங்கியவர் ரூ.4 லட்சத்திற்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்றார் என்பதை எப்படி ஏற்க முடியும்? என்னிடம் வாட்ச் இல்லை, பரிசாக வாங்கினேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியது தானே? ரபேல் கடிகார பில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
மாதந்தோறும் யார் வீட்டு வாடகை கொடுப்பார்கள்..? காருக்கு யார் டீசல் போடம் பணம் கொடுக்கிறார்..? 4 ஆடு மேய்த்தால் மூன்றே முக்கால் லட்சம் வாடகை தர முடியுமா? பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரமற்றகுற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்றார்.
Related Tags :
Next Story