''அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது''


அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது
x

‘‘அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது’’ என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறைகளில் கைதிகள் வீடியோ கால் வசதி மூலம் தங்களது உறவினர்கள், குடும்பத்தினரோடு பேசுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் பெண்கள் சிறையில் இந்த வசதி முதலில் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது குடும்பத்தினர், உறவினர்களோடு பேசும் போது கைதிகளின் மன அழுத்தம் குறையும். சிறைகளில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தி பணியாற்றும் போது சிறையின் கட்டுப்பாட்டை ஒரே இடத்தில் இருந்து முழுமையாக பார்க்க முடியும். மேலும் பாதுகாப்பை பலப்படுத்தவும், கைதிகள் தவறு செய்வதை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். சிறைக்குள் வரும் கைதிகள் கொரோனா பரிசோதனை செய்தபின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறோம். கொரோனா பாதிப்பில் இருந்து கைதிகளை காப்பது தான் எங்களது நோக்கம். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் பாதுகாப்பு நல்ல முறையில் தான் உள்ளது. ஓரிரு சிறுவர்கள் தப்பிச்சென்றால் உடனடியாக பிடித்து விடுகின்றனர். சிறுவர்கள் தப்பிப்பதை தடுப்பதற்காக காவலர்கள் சீருடையில் கேமரா அணிந்து பணியாற்றுவது கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ''பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராக தான் பார்க்கிறோம். அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை. வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்'' என்றார்.


Next Story