அண்ணாமலையின் 2-ம் கட்ட "என் மண் என் மக்கள்" யாத்திரை செல்லும் இடங்கள் அறிவிப்பு


அண்ணாமலையின் 2-ம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை செல்லும் இடங்கள் அறிவிப்பு
x

2-ம் கட்ட ”என் மண் என் மக்கள்” யாத்திரையை அண்ணாமலை வருகிற 4-ந்தேதி தொடங்குகிறார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்கிறார். முதற்கட்ட யாத்திரை கடந்த 22-ந்தேதி நெல்லையில் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட யாத்திரையை வருகிற 4-ந்தேதி தொடங்குகிறார்.

தொடர்ந்து 28-ந்தேதி வரை 19 நாட்கள் யாத்திரை செல்கிறார். அவர் யாத்திரை செல்லும் இடங்களை யாத்திரை பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டு உள்ளார். 4-ந்தேதி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் யாத்திரையை தொடங்குகிறார்.

5-ந்தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், 6-ந்தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், 7-ந்தேதி உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, 8-ந்தேதி கம்பம், போடிநாயக்கனூர், 9-ந்தேதி பெரியகுளம், 12-ந்தேதி கொடைக்கானல், 13-ந்தேதி ஆத்தூர், நிலக்கோட்டை, 14-ந்தேதி நத்தம், திண்டுக்கல், 15-ந்தேதி வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், 16-ந்தேதி பழனி, 21-ந்தேதி காங்கேயம், தாராபுரம், 22-ந்தேதி மடத்துக்குளம், உடுமலைபேட்டை, 23-ந்தேதி வால்பாறை, பொள்ளாச்சி, 24-ந்தேதி கொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 25-ந்தேதி கோவை தெற்கு, சிங்காநல்லூர், 26-ந்தேதி கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், 27-ந்தேதி கூடலூர், ஊட்டி, 28-ந்தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.


Related Tags :
Next Story