அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
x

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1967 முதல் 1971 வரை பி.எஸ்சி (அக்ரி) படித்து முடித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம், மியூசியம், குடுமியான்மலைக் கோவில், அண்ணாபண்ணை, தோட்டக்கலைப் பண்ணை, உயிர் உர உற்பத்தி மையம், திருமயம் கோட்டை, செட்டிநாடு அரண்மனை, பிள்ளையார்பட்டி மற்றும் மாத்தூர் கோவில்களை ஒன்றாக சென்று பார்வையிட்டனர். கூட்டத்தில் தங்களது அனுபவங்கள் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வயது மூப்பின் காரணமாக இறந்த நண்பர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்த கூட்டத்தினை திருக்கடையூர் அல்லது சென்னையில் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டத்தில் இன்னும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஒவ்வொரு உறுப்பினரும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பில் 22 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருப்பதி, வீரசேகரன், அண்ணாமலை மற்றும் சுகுமாறன் செய்திருந்தனர்.


Next Story