சிதம்பரம் அருகே வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி காவலாளி பிணம் போலீசார் விசாரணை


சிதம்பரம் அருகே    வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி காவலாளி பிணம்    போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி காவலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே குமாரமங்கலம்-நடராஜபுரம் இடையே செல்லும் வடிகால் வாய்க்காலில் 55 வயது மதிக்கத்த நபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என? அக்கம் பக்கத்து கிராமங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (வயது 55) என்பதும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் விசாரித்து வருகிறார்கள்.


Next Story