தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட கி.வீரமணி


தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட கி.வீரமணி
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மலரும் நினைவுகளை கி.வீரமணி பகிர்ந்து கொண்டாா்.

கடலூர்


சிதம்பரம்,

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று காலை சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதிக்கு வருகை தந்தார். கி.வீரமணி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்துள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தான் படிக்கும் போது பல்கலைக்கழகத்தின் முக்கிய அரங்கான கோகலே அரங்கில் தான் அவருக்கு வகுப்புகள் நடைபெறுமாம்.

மேலும் அவர் அங்கு தான் பேச்சு பயிற்சி பெற்றதாகவும், அதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் பயின்ற அரங்கை பார்ப்பதற்காக கி.வீரமணி சென்றார்.

அப்போது அரங்கின் வெளியே நின்று புகைப்படம் எடுத்து கொண்டதோடு பல்கலைக்கழகத்தில் தான் படித்த போது மலரும் நினைவுகளை பேராசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக மொழியியல் புல முதல்வர் அரங்க.பாரி, தமிழ்த்துறைத் தலைவர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி ஆகியோர் அவரை பல்கலைக்கழக இந்திய மொழியியல் புலத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அங்கு புல முதல்வர் அறையில் தான் படித்த காலத்தில் இருந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்களின் புகைப்படங்களை பார்வையிட்டு அவர்களை கி.வீரமணி நினைவு கூர்ந்தார். மேலும் தமிழ்த்துறை அறை எண்.26-ல் அவருக்கு அப்போது ஆங்கில வகுப்புகள் நடைபெறும் என்பதால்தான் பயின்ற வகுப்பறைக்கு சென்று அமர்ந்து அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார்.


Next Story