அண்ணாமலை பல்கலைக்கழக லேப் டெக்னீசியன் சாவு


அண்ணாமலை பல்கலைக்கழக லேப் டெக்னீசியன் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் மாடிப்படியில் தவறி விழுந்து அண்ணாமலை பல்கலைக்கழக லேப் டெக்னீசியன் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் அந்தோணியார் பள்ளி செல்லும் சாலையில் வசித்து வந்தவர் மகேந்திரன் (வயது46). இவர் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜெயதீபா(38).ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு அவர் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தடுமாறி மாடிப்படியில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் இதுயாருக்கும் தெரியவில்லை. மறுநாள் காலையில் அவரது மனைவி எழுந்து வந்து பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகையில் இருந்து தடய அறிவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story