அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி விஷம் தின்று தற்கொலை


அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி விஷம் தின்று தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆன 3-வது மாதத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்

அண்ணாமலைநகர்

மாணவி

நாகை மாவட்டம், வெளிப்பாளையம் மறைமலைநகரை சேர்ந்தவர் பழனிதுரை மகள் பிரியலட்சுமி(வயது 23). பட்டதாரியான இவருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஈக்காடு மண்டபம் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலாஜி(25) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரியலட்சுமி, அவரது கணவருடன் சிதம்பரம் முத்தையா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தோட்டக்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

விஷம் தின்றார்

இந்த நிலையில் பாலாஜி கடந்த வாரம் ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 22-ந் தேதி பிரியலட்சுமியும் திருவள்ளூர் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இது குறித்து பாலாஜி கேட்டபோது தான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு ஊருக்கு வந்ததாக கூறினார்.

உடனடியாக பிரியலட்சுமியை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சப்-கலெக்டர் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரியலட்சுமிக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன் விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story