ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
வாசுதேவநல்லூர் அருகே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, வாசுதேவநல்லூர் அருகே மலையடிகுறிச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்வர்ணா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் எம்.கே.சரவண பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சின்னத்துரை, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story