அண்ணா பிறந்த நாள் விழா- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா பிறந்தநாள்
திருப்பத்தூரில் அண்ணா பிறந்தநாளையொட்டி தி.மு.க. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் கட்சியினர் சிவகங்கை சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, நகர செயலாளர் கார்த்திகேயன், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட சேர்மன் பொன்மணி, பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், நகர் செயலாளர் இப்ராம்ஷா, முன்னாள் யூனியன் சேர்மன் சிதம்பரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முருகேசன், ரணசிங்கபுரம் ஞானசேகரன், ராஜசேகரன், அழகர்சாமி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
சிலைக்கு மரியாதை
ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் நகர செயலாளர் முருகேசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார் உள்ளிட்ேடார் மரியாதை செலுத்தினர். சிங்கம்புணரியில் ஒன்றிய, நகர, தி.மு.க. இளைஞரணி சார்பில் நகர செயலாளர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவை தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து உள்ளிட்டோர் தலைமையில் பஸ்நிலையம் முன்புள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில், தி.மு.க. மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர், சோமசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் ராசு, பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவபுரி சேகர், ஷீலா சொக்கநாதன், நகர துணை செயலாளர் அலாவுதீன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார் தனுஷ்கோடி, பூமிநாதன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் புகழேந்தி, சூரக்குடி சிவசுப்பிரமணியன், மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் ஞானி செந்தில், ஒன்றிய இளைஞரணி மனோகரன், தொழில்நுட்ப பிரிவு மாடன் சையது, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், பிரேம்குமார், கவுன்சிலர் மீனா, ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.