அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி


அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி
x

சேலத்தில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி நடந்தது.

சேலம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. இதில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கான பிரிவில் 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர் தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது. பெண்களுக்கான பிரிவில் 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என நான்கு பிரிவுகளில் இப்போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2, ஆயிரமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு தலா ரூ1,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story