அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
x

வாணியம்பாடியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.கோபால், நகர செயலாளர் சதாசிவம், பேரூர் செயலாளர் சரவணன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.முனிசாமி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி, செய்தி தொடர்பாளர் சமரசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில் தற்போது தி.மு.க. அரசு பற்றி தி.மு.க.வினரே விமர்சனம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நன்றாக இருந்தது என்று தி.மு.க.வினர் பேசுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் நிலை உருவாகி வருகிறது. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்றார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா, இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் டில்லி பாபு, ஒன்றிய செயலாளர்கள் சி.செல்வம், சாம்ராஜ், ஆம்பூர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தசாமி, சிவானந்தம், ரபீக் அகமது உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.பாரதிதாசன் நன்றி கூறினார்.


Next Story