அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x

ஒட்டங்காட்டில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு கடை வீதியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டின் தீர்மான விளக்க கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். பேராவூரணி ஒன்றிய குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பேராவூரணி பேரூர் செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. ரத்தினவேல் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராசு, சி.வி.சேகர், பட்டுக்கோட்டை நகா் மன்ற முன்னாள் தலைவர் ஜவகர் பாபு, மாவட்ட பாசறை முன்னாள் துணைச் செயலாளர் ஸ்டாலின் பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், தொகுதி கழக முன்னாள் இணைச் செயலாளர் அலிவலம் பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமமூர்த்தி, அலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.


Next Story