அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
x

குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், பேரணாம்பட்டு நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வி.ராமு, டி.சிவா, டி.பிரபாகரன், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், தலைமை கழக பேச்சாளர்கள் கோபி காளிதாஸ், சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, ரவிச்சந்திரன் உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வி.குமரன் நன்றி கூறினார்.


Next Story