அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கலவையில், அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
ஆற்காடு தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கலவையில் நடந்தது. கலவை பேரூர் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ந.வா.கிருஷ்ணன், ஆற்காடு நகர செயலாளர் ஜிம் சங்கர், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், விளாப்பாக்கம் பேரூர் செயலாளர் ராமசேகர், திமிரி பேரூர் செயலாளர் கந்தசாமி ஆகியோர் வரவேற்றனர்.
திமிரி, ஆற்காடு, கலவை, விளாப்பாக்கம், திமிரி ஒன்றியம் கிழக்கு, மேற்கு, ஆற்காடு ஒன்றியம் கிழக்கு, மேற்கு ஆகிய கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் வாலாஜாபாத் முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், சேவல் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
முடிவில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாலிசி ரமேஷ் நன்றி கூறினார்.