ஆனி அமாவாசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஈரோடு
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசேஷ நாட்கள், அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் நேற்று ஆனி அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்கள் ஒரே நாளில் வந்ததால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்தனர்.
இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருக பெருமானுக்கு 6 கால பூஜைகள் நடைபெற்றது.
முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி- தெய்வானை மற்றும் தன்னாசியப்பன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story