கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

கால்நடை மருத்துவ முகாம்

திருப்பூர்

பெருமாநல்லூர்

பெருமாநல்லூர் கால்நடை மருத்துவமனைக்கு உட்பட்ட ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி மொய்யாண்டம்பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1,119 கால்நடைகள் பங்குபெற்றன. அதில் 213 பசுக்கள், 51 எருமைகள் ஆகும். மேலும் 200க்கு மேற்பட்ட வெள்ளாடுகள், கோழிகள் மற்றும் நாய்களுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது.

சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் கால்தடை வளர்போருக்கு மேலாண்மை விருது வழங்கப்பட்டது. முகாமில் திருப்பூர், பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் மதியழகன், கால்நடை உதவி மருத்துவர்கள் அப்ரோஸ், நந்தகுமார், கால்நடை ஆய்வாளர் சுதாபிரியா, உதவியாளர் அமுதா மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Next Story