ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா


ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
x

உம்மியம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

தர்மபுரி

நல்லம்பள்ளி

தொப்பூர் அருகே உள்ள உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். எஸ்.எம்.சி. தலைவர் அமுதா, ஊர் முக்கிய பிரமுகர்கள் பன்னீர்செல்வம், மாதையன், முருகேசன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் எழிலரசி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் நிர்மலாரோஸ்லீன் நன்றி கூறினார்.


Next Story