வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு


வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு
x

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து விடுமுறை என்பதால் நேற்றும், இன்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள மனித குரங்கு, வெள்ளை புலி, யானை, சிங்கம், மயில், பறவைகள் போன்றவற்றைப் பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமை பூங்காவுக்கு வார விடுமுறை என்ற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறைக்காலம் என்பதால் பார்வையாளர்களுக்காக நாளை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story