வருடாபிஷேக விழா


வருடாபிஷேக விழா
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருடாபிஷேக விழா நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி விஸ்வகர்மா உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் 8-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 23-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையொட்டி 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாயல்குடி சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து காமாட்சி அம்மனுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வருடா பிஷேகம் நடைபெற்றது. பொது அன்னதானம் வழங்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பூத்தட்டுடன் நகர்வலம் வந்து காமாட்சி அம்மனுக்கு பூச்செரிதல் விழா நடந்தது. நிகழ்ச்சி நிறைவாக காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை சாயல்குடி விஸ்வகர்மா உறவின்முறை நிர்வாகிகள், விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story