காளீஸ்வரி கல்லூரியில் ஆண்டு விழா
காளீஸ்வரி கல்லூரியில் ஆண்டு விழா
சிவகாசி
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார். முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது, கிராமப்புற மாணவர்களும், ஏழை தொழிலாளர் களின் குழந்தைகளும் கல்லூரி படிப்பை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது, வேலை பெறும் தகுதியினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். செல்போனுக்கு நேரம் செல விடுவதை தவிர்த்து விட்டு, படிப்பதற்கு கூடுதல் நேரம் செல விட வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் முழுவதும் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், அவரது மனைவி நளினி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அசோகன் எம்.எல்.ஏ. பேசியதாவது, இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தங்களது தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தொழில்முனைவோராக மாறி பலருக் கும் வேலை வழங்கும் நிலைக்கு வளர வேண்டும். தோல்வி களை கண்டு துவண்டு விடாமல் அத்தோல்வியை வெற்றி படிக் கட்டுகளாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள், மாணவர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் நளாயினி நன்றி கூறினார்.