மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆண்டு விழா
ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட உதவி கலெக்டர் வினோத்குமார் கலந்துகொண்டு பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
மேலும் மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அறக்கட்டளை இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story